இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ரூ.70 செலுத்தியவர்களுக்கு 1900 : குடிசைகளுக்கு ரூ.600மின் கட்டணம் : மின்கணக்கெடுப்பில் குளறுபடி
உச்சிப்புளி : மின்கணக்கெடுப்பு குளறுபடியால் குடிசைகளுக்கு 600 ரூபாயும் ,70 செலுத்தியவர்களுக்கு 1900 ரூபாயும் மின் கட்டணமாக வந்துள்ளதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் இரண்டு ஆயிரத்து 200க்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இங்கு சில நாட்களுக்கு முன் மின் ஊழியர்கள் வீடுகளில் கணக்கெடுப்பு செய்தனர். இதில் வழக்கத்திற்கு மாறாக பல மடங்கு தொகை அதிகரித்து மின் அட்டையில் பதிவு செய்துள்ளனர். குடிசை வீடுகளுக்கு 400 ரூபாய் முதல் 600 வரை பதிந்துள்ளனர் .
இதில் அதிர்ச்சியடைந்த பலர் பணம் செலுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர். ஏராளமானோர் மின்சார அலுவலகத்திற்கு சென்று முறையிட்டும் முழுமையான விளக்கங்களை பெற முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
இதோ பாதிக்கப்பட்ட சிலரின் குமுறல்கள்:
முகம்மது அனிஸ்: மின் மீட்டர் பெரும்பாலானவை பழுதடைந்துள் ளது. மீட்டரை பரிசோதனை செய்யுமாறு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பூட்டிக்கிடக் கும் வீட்டுக்கு 2157 ரூபாய் பில் வந்துள்ளது.
செய்யது மர்ஷா: வீட்டில் எவ்வித மின் சாதனமும் இல்லை. வழக்கமாக 40 லிருந்து 60 ரூபாய்க்குள் செலுத்திய எனக்கு தற்போது 600 ரூபாய் கட்ட வேண்டும் என குறித்துள்ளனர்.
ரஹ்மத்நிஷா: கருவாடு வியாபாரம் செய்து வருகிறேன். அதிகபட்சமாக 70 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்தேன். தற்போது 1900 ரூபாய் கட்டுவதற்கு பில் வந்துள்ளது. கருவாடு விற்று குடும் பத்தை நடத்தி வரும் நாங்கள் மின்சார வாரிய கணக்கெடுப்பால் திணறி போய் உள்ளோம்.
சுந்தர்(புதுமடம் ஊராட்சி உறுப்பினர்): குடிசைகளுக்கு 600 ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துள் ளனர். மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை காட்டிலும் மின் தடையின் நேரம் அதிகம் உள்ளது. இந்நிலையில் குடிசை வீடுகளுக்கு முரண் பாடான பில் தொகை வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மருதும்மைதீன்( ஒன்றிய கவுன்சிலர்): குளறுபடியான கணக்கெடுப்பால் புதுமடம் கிழக்குப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மின்மீட்டர்களின் நிலையை பரிசோனை செய்ய வேண்டும். வழக்கமாக வசூலிக்கப்பட்ட தொகை செலுத்த அனுமதி வழங்க வேண்டும் 'என்றார்.
உச்சிப்புளி உதவி மின்பொறியாளர் தமிழரசனிடம் கேட்டபோது, ""கூடுதல் கட்டணம் சம்பந்தமாக புகார் வந்துள்ளன. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
Dinamalar 30-10-2009
_
நீங்கள் படித்த இத்தகவலை பகிர்ந்து கொள்ள Facebook,Orkut...etc
_
